BREAKING NEWS

கை விலங்கிட்டு கயிறு கட்டி கறுப்பினத்தவரை அழைத்து சென்ற காவலர்கள்

அமெரிக்காவில் அத்துமீறி கட்டிடத்துக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்பட்ட கறுப்பினத்தவரை, குதிரையில் வந்த காவலர்கள் இருவர், விலங்கு பூட்டி, கயிறு கட்டி நடத்திச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.

டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி கேல்வெஸ்டன் என்ற இடத்தில் காவலர்கள் குதிரையில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கட்டிடம் ஒன்றில் படுத்திருந்த டொனால்ட் நீலி என்ற கறுப்பினத்தவரை அழைத்து, அத்துமீறி உள்ளே நுழைந்ததாக கைது செய்து விலங்கு பூட்டினர். பின், கயிற்றில் கட்டி பல கட்டிடங்களைக் கடந்து அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் காவலர் இருவரது ஆடையில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவானது. இது மிகவும் கெட்ட விஷயமாகப் பார்க்கப்படும் என காவலர்கள் பேசிக் கொண்டதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களை, வெள்ளையினக் காவலர்கள் பெரிய காரணங்கள் ஏதும் இன்றி சுட்டுக் கொல்வதாக அவ்வப்போது வன்முறைகள் வெடிக்கும் நிலையில், இந்த வீடியோ வெளியாகியுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *