BREAKING NEWS

கிளிமாஞ்சாரோ மலையிலிருந்து கீழே விழுந்து சுற்றுலா பயணி உயிரிழப்பு

தான்சானியா நாட்டிலுள்ள கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்ட கனடாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், தனது பாராசூட் இயங்காததால் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ மலைப்பகுதி முன்னணி சுற்றுலா தலமாக விளங்கிவரும் நிலையில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் இங்குவந்து மலையேறுவதும், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபடுவதும் வழக்கம்.

அந்த வகையில், கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் கைலோ என்ற சுற்றுலா பயணி, மலை உச்சியில் பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தரையிறக்கும் முயற்சியாக தான் அணிந்திருந்த பாராசூட்டை அவர் இயக்கியுள்ளார். ஆனால் தக்க சமயத்தில் பாராசூட் இயங்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் பிடிமானத்தை இழந்த அவர், சுமார் 20 ஆயிரம் அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *