BREAKING NEWS

கிருஷ்டி பிரைடு நிறுவனம் கூட்டுறவு வங்கியில் ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் – வருமானவரி துறை சோதனையில் ஆவணங்கள் சிக்கியது.

 

 

வரி ஏய்ப்பு

கிருஷ்டி பிரைடுகிராம் நிறுவனம் அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது. தொடர் புகார் வந்ததால் வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

முதல் இரண்டு நாட்கள் சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரில் வருமான வரி சோதனை செய்தனர். அதேபோல் கிருஷ்டி பிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்த இடங்களில் எல்லாம் சோதனை நடந்தப்பட்டது.

தங்கம் பறிமுதல்

திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடந்தது. நேற்று 5-வது நாளாக வருமானவரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு ஆண்டிப்பாளைய தலைமை அலுவலகத்தில் தற்போது சோதனை நடக்கிறது. முறைகேடாக சம்பாரிக்கப்பட்ட 10 கிலோ தங்கம், ரூ.17 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டெபாசிட்

மேலும் அவர்கள் அவர்கள் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம் ஆகியுள்ளது. அதற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பியதில் அவர் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாள் முடிவில் வரித்துறை சோதனையை தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.




Leave a Reply