BREAKING NEWS

கிரண்போஸ் நிறுவனத்திற்கு புதிய பொதுமேலாளர்

நாட்டின் பைப் தொழிற்சாலைகளில் முன்னணி நிறுவனமாக விளங்கி வருவது, கிரண்போஸ் நிறுவனம். கிரண்போஸ் ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரும், இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 14 கிளைகள் செயல்பட்டு வருகிறது.

உள்கட்டமைப்பு, தொழிற்சாலை பயன்பாடு, வீட்டுத் தயாரிப்பு உள்ளிட்ட கட்டுமான பணிகளில் கிரண்போஸ் நிறுவனத்தின் பைப்புகள் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் புதிய பொதுமேலாளராக சரவணன் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா, பூடான், வங்கதேசம், நேபாளம் நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கும் பொதுமேலாளராக பணியாற்ற உள்ளார்.




Leave a Reply