BREAKING NEWS

கியா செல்டோஸ் புதிய வேரியண்ட் அறிமுகம்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இரு வேரியண்ட்களின் விலை ரூ. 16.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செல்டோஸ் மாடல் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் ஆகும்.

இந்தியாவில் கியா செல்டோஸ் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 9.69 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெக்லைன் மற்றும் ஜி.டி. லைன் என இருவித ட்ரிம்களில் கிடைக்கிறது. இதில் ஜி.டி.எக்ஸ். பிளஸ் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும்.

புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடல்: 1.4 லிட்டர் டிஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் மற்றும் டீசல் என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இரு என்ஜின்களும் 6ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. எனினும், பெட்ரோல் என்ஜினுடன் 7ஸ்பீடு டி.சி.டி. மற்றும் டீசல் என்ஜினுடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

இதுதவிர கியா செல்டோஸ் 1.5 லிட்டர் என்.ஏ. பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. இதிலும் மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் விரும்பியதை தேர்வு செய்யும் வசதி கிடைக்கிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கின்றன.




Leave a Reply