BREAKING NEWS

காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தது என்ன? பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இது பற்றி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்துள்ளார்.

காஷ்மீர் இந்தியாவின் அதிகாரபூர்வ பகுதி அல்ல, சர்ச்சைக்குரிய பகுதி என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஐ.நா. உட்பட பல இடங்களில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பிறநாடுகளும், ஐ.நா. அமைப்பும் தலையிட வேண்டும் எனவும் பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிவித்தார். உலக அரங்கில் காஷ்மீர் பிரச்சினையை தொடர்ந்து எழுப்பி வரும் பாகிஸ்தானும், மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இது பற்றி கூறுகையில் ‘‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தனிச்சையான முடிவு எதையும் எடுக்க முடியாது. இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெற்றோ. பாகிஸ்தானின் ஒப்புதலை பெற்றோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே இது சட்டவிரோதமானது’’ எனக் கூறியிருந்தது.

இதைத்தெடார்ந்து மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை கூடி விவாதிக்கிறது. அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை 11:00 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறும் எனவும், காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் எனவும் பாகிஸ்தான் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply