BREAKING NEWS

“காஷ்மீர் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்; விமானம் தேவையில்லை”

காஷ்மீர் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்; விமானம் தேவையில்லை என ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு ராகுல்காந்தி பதிலளித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு வன்முறை சம்பவங்கள் நடப்பதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும், இதை பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவி வருவதாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் நிலவரத்தை பார்வையிட விமானத்தை அனுப்பி வைப்பதாகவும், நிலைமையை நேரில் வந்து பார்த்தபின் ராகுல் காந்தி அதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம் எனவும் சத்யபால் மாலிக் கூறியிருந்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

காஷ்மீர் பயணம் மேற்கொள்ள சுதந்திரத்தை உறுதி செய்யுங்கள்; விமானம் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் அழைத்ததால் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் நானும் இணைந்து காஷ்மீர் வரத் தயார். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் பயணம் மேற்கொள்ள தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply