BREAKING NEWS

காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – முதல்வர் மெகபூபா பதவி விலகினார்.

 

ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ., பி.டி.பி. கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பி.டி.பி. கட்சியின் மெகபூபா முப்தி முதல்வராக இருந்தார்.இந்நிலையில் பி.டி.பி. கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை இன்று பா.ஜ.வாபஸ் பெற்றது. இதையடுத்து மெகபூபா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கடிதத்தை கவர்னர் வோராவிடம் அளித்தார்.

இந்நிலையில் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சிக்கு கவர்னர் வோரா, பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply