BREAKING NEWS

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டுள்ளது தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டுள்ளது
தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி


சென்னை, மே 18-

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டுள்ளது என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

காவிரியில் அரசியல்

தமிழகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், மத்திய அரசு கர்நாடகா சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, மேலாண்மை வாரியத்ைத அமைக்காமல் காலதாமதம் செய்தது. இதனையடுத்து, மத்திய அரசு காவிரி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடக தேர்தல்

ஆனால், மத்திய அரசு அதற்கும் காலதாமதம் செய்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் காவிரி விவகாரத்தில் பா.ஜ.க. அரசியல்தான் செய்கிறது என்று வெளிப்படையாகவே பேட்டி அளித்தார். இந்த நிலையில், கர்நாடகாவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த எடியூரப்பா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளது ஜனநாயகப் படுகொலை என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரரஜன் நேற்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

தமிழகத்துக்கு ஆதரவு

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பா.ஜ.க. செயல்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தை கிடப்பில் போட்ட காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி அரசு எவ்வளவோ விமர்சனம் செய்தார்கள். கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நியாயமான தீர்வும், நீர் பங்கீடும் தமிழகத்திற்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply