தற்போதைய செய்திகள்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி…..

மதுரை
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையில் கூறினார்.

டெல்லியில் ஆலோசனை
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் டெல்லியில் ஆலோசனை நடத்தியது.
மேலாண்மை வாரியம்
தமிழக அரசின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் பேசுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பிரச்சினையில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.
முதல்வருடன் ஆலோசனை
இந்த நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவினர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

மத்திய அரசை வலியுறுத்துகிறோம்
இந்த நிலையில், மதுரையில் கருங்காலக்குடியில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். என்று தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து, தமிழக பட்ஜெட்டில் மக்களின் முன்னேற்றம், அரசின் முன்னேற்றம் இடம் பெற்றிருக்கும். தமிழக பட்ஜெட்டில் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட அனைத்து ஷரத்துகளும் உறுதியாக இருக்கும் என்று கூறினார்.
Leave a Reply