தற்போதைய செய்திகள்
10704CNI_APRIL_ 07 _ G (1)

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை மூத்த வழக்கறிஞர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு…

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், சட்ட நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

நீதிமன்ற தீர்ப்பு

தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறப்பதற்கு 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

அது மட்டுமின்றி 3 மாதம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது. இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆளும் அ.தி.மு.க.வும் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தியது. எதிர்கட்சியான தி.மு.க.வும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது. நேற்று 7-வது நாளாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. இன்று சென்னையில் காவிரி பிரச்சினைக்காக நடிகர், நடிகைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.

போராட்டங்கள்

11-ந் தேதி விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசு மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு விசாரணை நாளை (திங்கட்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அதே நேரத்தில் மத்திய அரசு, ‘‘ஸ்கீம் என்றால் என்ன?’’ என்று விளக்கம் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவும் நாளைக்கே விசாரணைக்கு வர உள்ளது. இரு வழக்குகளிலும் தமிழக அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வலுவான வாதங்களை எடுத்து வைத்து வாதாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு வழக்குகளிலும் தமிழக அரசு சார்பில் 9 பேர் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளனர்.

முதல்வர் ஆலோசனை

அந்த சட்ட வல்லுனர்கள் குழுவில் மூத்த வக்கீல் சேகர் நாப்தே, லட்சுமணன், அருணாசலம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் 9 பேரும் நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்தனர். அவர்களுடன் நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழக அரசின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனையில், நாளை உச்சநீதிமன்றத்தில் நடக்க உள்ள விசாரணையில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த உத்தரவை மத்திய அரசு காலம் தாழ்த்தி, காலக்கெடுவை கடந்து, தற்போது நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளது குறித்து தக்க தமிழகத்தின் சார்பில் தக்க வாதத்தை முன்வைத்து வாதட வேண்டும். அதேநேரத்தில் தமிழகத்தில் நடக்கும் இந்த வழக்கில் தமிழகம் வெற்றிபெற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்திப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Leave a Reply