தற்போதைய செய்திகள்

காவிரி வழக்கில் வரைவு திட்டம் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

 

 

காவிரி வழக்கில் வரைவு திட்டம் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது
அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
புதுடெல்லி.

காவிரி வழக்கில் வரைவு திட்டம் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது, என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

நல்ல தீர்வு கிடைத்துள்ளது

காவிரி பிரச்னையில் வாரியம், குழு அல்லது ஆணையம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்தை மத்திய நீர் வளத்துறை செயலாளர் யூ.பி சிங் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இன்று தாக்கல் செய்தார்.

இந்நிலையில், காவிரி வழக்கில் வரைவு திட்டம் மூலம் நல்ல தீர்வு கிடைத்துள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில் கூறியுள்ளார்.

தமிழக அரசின் கருத்து

அவர் மேலும் கூறுகையில், வரைவு திட்டத்தின் குறை, நிறைகளை ஆராய்ந்து, தமிழக அரசின் கருத்தை 16-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம், என்றார்.

மேலும் வரைவு திட்டம் தாக்கல் செய்த மத்திய அரசுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார்.
Leave a Reply