தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் நியாயமான தீர்வு. ரஜினிகாந்த் கருத்து…..

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
நதிநீர்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், 6 வாரங்களுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு மவுனமாகவே இருக்கிறது.
நியாயமான தீர்வு
உச்சநீதிமன்றம் வழங்கிய கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து ரஜினி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ’ காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். நீதி நிலைமாட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply