தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு-ராஜினாமா தவிர்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்கப்படும் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்….

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ராஜினாமா தவிர, மற்ற வழிகளில் மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் அழுத்தம் அளிக்கப்படும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
காவிரி விவகாரம்
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், தமிழக அரசு பல்வேறு வழிகளில் மத்திய அரசுக்கு அழுத்தத்தை தர வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
அழுத்தம் அளிக்கப்படும்
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வத்திற்கும், முதல்-அமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கும், கட்சியை நடத்தும் அதிகாரத்தை பொதுக்குழு வழங்கியுள்ளது. அவர்களைத் தவிர கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வரையறைக்கு உட்பட்டு பேச வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு ராஜினாமாவை தவிர மற்ற வகைகளில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். காவிரி விவகாரத்துக்காக நாடாளுமன்றத்தை 10 நாட்களுக்கு மேல் முடக்கியுள்ளோம். அ.தி.மு.க. சார்பில் காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையைக் காக்க ஏராளமான போராட்டங்களை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply