தற்போதைய செய்திகள்
bandh

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து-தமிழகம் முழுவதும் கடையடைப்பு சாலை, ரெயில் மறியலில் ஈடுப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கைது…..

சென்னை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்களில் ஈடுப்பட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி விவகாரம்…

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால் தமிழ்நாட்டில் ஆளும் அ.தி.மு.க. உள்பட, அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தி, பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆளுங்கட்சியான அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 3-ந் தேதி நடந்தது. சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாது. காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

முழு அடைப்பு

இந்தநிலையில், காவிரி விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் இறங்கி உள்ளனர். வணிகர்களும் போராட்ட கலத்தில் குதித்துள்ளனர். கல்லூரி மாணவர்களும் காவிரி விவகாரத்துக்கா குரல் கொடுத்து வருகின்றனர். விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்பட பல கட்சிகள் முன்னின்று இந்த முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தின.

பெரும் ஆதரவு

அனைத்து தொழிற்சங்கங்களும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாய அமைப்புகளில் 12 அமைப்புகள் பங்கேற்றுள்ளன. முக்கிய வர்த்தக சங்கங்களும் ஆதரவு தெரிவித்ததால் 90 சதவீதத்துக்கும் மேலாண கடைகள் அடைக்கபட்டன. வணிகர்கள் கடைகளை அடைத்து மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த முழு கடையடைப்பு போராட்டத்தால் தமிழகம் முழுவதும் குறைந்த அளவே, பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை. கடையடைப்பு போராட்டம் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முழு அடைப்புக்கு ஆதரவு தந்தனர். முழு அடைப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தனியார் பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளித்து இருந்தது. அதேபோன்று பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் விடுமுறை விடப்பட்டு இருந்தன.

கண்டன பேரணி

முழு அடைப்பு போராட்டத்தை நடத்திய, தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்பட கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் சாலை மறியல், ரெயில் மறியல், கருப்பு கொடி ஏந்தி கண்டன பேரணிகளை நடத்தினார்கள்.
சென்னையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.க. தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா உள்ளிட்டத் தலைவர்கள் திடீரென அண்ணா சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். இந்த தகவல் அறிந்த அக்கட்சிகளின் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைவரும் கருப்பு கொடி ஏந்தி அண்ணா நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்தனர்.

வெறிச்சோடி சாலை

மேலும், சென்னையை பொருத்தவரை நகர் முழுவதும் 90 சதவீதத்திற்கு மேலாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மர்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு செயலளார் பாலகிருஷ்ணன் தலைமையில் கடற்கரை சாலை அருகே ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.க., கம்யூனிஸ்ட் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 1 நோரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையை அடுத்து, மதுரையில் போராட்ட களத்தில் இறங்கிய கட்சியினர் அனைவரும் ரெயில் மற்றும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மதுரை நகர் முழுவதும் அதிக அளவில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சேலம், திருச்சி, கோவை மாநகரங்களிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன.

ஒரு லட்சம் போலீஸ்

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் முழுவதும் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடைப்பு போராட்டத்துக்கு முழு ஆதரவு கொடுத்தனர். அந்த மாவட்டங்களில் சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களும் பெரும் அளவில் நடந்தது. போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆயிரகணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து நடந்த இந்த முழு அடைப்பு போராட்டம் என்பது பெரிய அளவில் மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். மேலும், வணிகர்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் ஒரே நிலையில் இருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடந்த இந்த போராட்டம் வெற்றி பெற்றதாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கூறுகிறார்கள்.

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
Leave a Reply