தற்போதைய செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி – 3-ந் தேதி அ.தி.மு.க. உண்ணாவிரதம்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னிர் செல்வம் பங்கேற்பு …

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்மா பேரவை சார்பில் மதுரையில் 120 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணம் நடத்தி வைத்தனர். இந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஜெயலலிதா வழியில்… 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் யாரும் என்னை வந்து பார்க்கவேண்டாம் மாறாக நாம் அங்கு சென்று ஏழை எளிய மக்களுக்கு நம்மால் முடிந்த நல்ல நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள் என்று முன்பே நமக்கு அறிவுரை வழங்கியிருக்கின்றார்.

அந்த வகையில் தான் நாம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்குகின்ற நிகழ்ச்சியாகவும், மற்றும் இலவச திருமண விழாக்களையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்யும் நன்றியாக இதனை செய்துவருகின்றோம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனை எந்த நேரத்திலும் விட்டுகொடுக்காமல் பல்வேறு உறுதியான நடவடிக்கை எடுத்தார். காவிரி இறுதி தீர்ப்பு 2007-ல் வழங்கியவுடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா
மத்திய, மாநில அரசுக்கு அறிக்கையை அம்பலப்படுத்தினார். அப்போது மத்தியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்றது.

சட்டபோராட்டம்

அப்போது ஜெயலலிதா சொன்னார், நீண்ட நாட்களுக்கு பின்பு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்துள்ளது. அந்த இறுதி தீர்ப்புக்கு முழுவடிவம் அதிகாரம் கொடுக்கவேண்டும் என்றால், மத்திய அரசிதழில் அதனை அரசானையாக
வெளியிடவேண்டும் என மத்திய மாநில அரசு நினைத்தால் 24 மணிநேரத்தில் செய்யலாம் என சொல்லி வலியுறுத்தினார்.

ஆனால், இதற்கு மத்திய காங்கிரஸ் அரசும், மாநில தி.மு.க. அரசு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து ஜெயலலிதா வலியுறுத்தி கொண்டிருந்தார். மதுரையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா சவாலாக சொன்னார் 2011 தேர்தலி
வெற்றி பெறுவேன். மேலும், உறுதியாக காவிரிக்கு ஒரு முடிவை கொண்டுவந்து சேர்ப்பேன் என்று சொல்லி 2011 முதல்வர் ஆனவுடன் பலமுறை கடிதம் எழுதினார்கள். பலனில்லை.

உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டங்கள் நடத்தி 2013-ல் காவிரி -பிரச்சனைக்கு தீர்ப்பு பெற்றுதந்தார்கள். உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பினை நிறைவேற்ற காவிரி மேலாண்மை வாரியம், நீரை முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை 6 வாரக் காலத்திற்குள் மத்திய அரசு அமைக்கவேண்டும் சொல்லி நேற்றோடு 6 வார கால அவகாசமும் முடிந்துவிட்டது. இன்றைக்கு தமிழக மக்களே எதிர்பார்த்துக் கொண்டிருகின்றது இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லபோகின்றது என்று.

உண்ணாவிரதம்

ஆளுகின்ற தமிழக அரசாகிய நாங்களும் என்ன செய்யப்போகின்றோம் என தமிழக மக்கள் காத்துக் கொண்டிருகின்றனர். உறுதியாக சொல்கின்றோம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வந்த பாதை தான் எங்கள் பாதை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சோதனை எல்லாம் வென்று தமிழகத்தின் ஜீவாதார உரிமைக்கு சிறு பங்கமும் ஏற்படாமல் நடத்திய கட்சியும் ஆட்சியும் அடிபிறழாமல் நடப்பவர்கள் நாங்கள்.

அந்தவகையில், தமிழகத்தின் ஜீவாதார உரிமை எந்த நேரத்திலும் பறிபோய்விடாமல் இருக்க எங்களுடைய குரல் என்றைக்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதனை தெரிவித்துகொண்டு, அதற்கு அடையாளமாக அ.தி.மு.க. சார்பில் வருகின்ற ஏப்ரல் 3-ந் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த உண்ணாவிரத போராட்டம் இந்தியாவில் மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மத்தியில் இருப்பவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை பெற்று காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீரை முறைப்படுத்தும் குழுவை அமைக்கவேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தி பேசப்படும் என்பதையும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்
படி இந்த உண்ணாவிரதப் போராட்டம் எந்தவித சிறு பங்கமும் ஏற்படாமல், சட்ட ஒழுங்கிற்கு சிறு பாதிப்பும் ஏற்படாமல் நடக்கும் என்பதையும் இதில் அ.தி.மு.க. தொண்டர்களும், விவசாய பெருங்குடி மக்களும் மற்றும் ஒட்டுமொத்த மக்களும் இதில் கல்ந்துகொண்டு இந்த போராட்டத்தை வெற்றி பெறசெய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.

இவ்வாறு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னையில் முதல்வர்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி, அ.தி.மு.க. சார்பில் 3-ந் தேதி உண்ணாவிர போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த அறிவிப்புக்கு இணங்க, மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Leave a Reply