BREAKING NEWS

காவிரி மேலாண்மை ஆணையம் : மத்திய அரசு மீது வாசன் குற்றச்சாட்டு.

த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளின் வேதனைக்கு மத்திய மாநில அரசுகளே காரணம். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டும், கர்நாடக உறுப்பினர் நியமிக்கப்படாதது வேதனைக்குரியது. இதிலும் மத்திய அரசு மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கிறது. ஆணையம் அமைக்கப்பட்ட உடனே, ஆணையத்தின் செயல்பாட்டை ஆரம்பித்திருந்தால் தமிழகத்துக்கான நீர் கிடைத்திருக்கும்.மேட்டூர் அணையையும் திறந்திருக்க முடியும். எனவே, விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்கு தமிழக அரசு உதவிகள் செய்து, சலுகைகள் வழங்கி, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply