BREAKING NEWS

காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்க அனுமதி தரக் கூடாது –  அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

 

 

காவிரி பாசனம்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அவற்றுக்கான உரிமங்களை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவங்களுக்கு நாளை வழங்கவிருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி விழுப்புரம் மாவட்டம் வரை பாலைவனமாக்கும் நோக்குடன் இத்திட்டங்களை செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

மீத்தேன்

காவிரி பாசன மாவட்டங்கள் வளம் கொழிக்கும் பூமியாகும். அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை உறுதி செய்ய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், வேளாண்மையை ஒழித்து விட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது.

மீத்தேன் எரிவாயு, பாறை எரிவாயு, கச்சா எண்ணெய் உள்ளிட்ட வளங்களை தோண்டி எடுக்கும் பூமியாக காவிரி பாசன மாவட்டங்கள் மாற்றப்பட்டால் உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Leave a Reply