BREAKING NEWS

கால்பந்து விளையாட்டு பற்றி இன்னொரு படம்

இப்போது தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்திய கதைகள் அதிகம் வரத் தொடங்கி உள்ளன.
ஒரே நேரத்தில் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து 4 படங்கள் தயாராகின்றன. விஜய் நடிப்பில் உருவாகும் பிகில் படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு தொடர்பானது.
சுசீந்திரன் இயக்கும் சாம்பியன் ஆண்கள் கால்பந்து விளையாட்டு தொடர்பானது. கதிர் நடிக்கும் ஜடா கால்பந்து விளையாட்டு வீரனின் கதை. இந்த நிலையில் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் ‘‘ க் ‘‘என்ற படமும் கால்பந்து விளையாட்டு தொடர்பானது.
தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘க்’. அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியான ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதியிருக்கிறார்.
படம் பற்றி அவர் கூறுகையில்,‘‘ ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறேன். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், நடக்கும் சம்பவங்களை கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை இது‘‘என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *