BREAKING NEWS

காலையில் சுட்டெரித்த வெயில், இரவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்து, குளிர்வித்தது.

 

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 101 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 98 டிகிரி வெப்பநிலை பதிவாகியது. பகலில் சுட்டெரித்த வெயிலால் அவதிப்பட்ட மக்கள், சென்னையில் திடீரென மழை பெய்தது.

இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை, விட்டுவிட்டு பெய்தது. குறிப்பாக, சென்னையில் கே.கே.நகர், அசோக்நகர், கோடம்பாக்கம், ஷெனாய்நகர், அண்ணாநகர், மீனம்பாக்கம், ஆலந்துார், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. காலை முதல் வெயில் அடித்த நிலையில், இரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.




Leave a Reply