BREAKING NEWS

‘காலா’வை எதிர்க்கும் காளையர்கள்…

ரஜினி காந்த்.. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரின் கண் அசைவிற்காக துணை நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என திரையுலகினர் காத்து கிடக்கின்றனர். ரஜினி, ஆரம்ப காலத்தில் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல, சம்பளத்தை கூட்டினார். சில பல ஆயிரங்களுக்கே திண்டாடியவர் கோடிகளில் புரண்டார். அப்ேபாதுதான் அவர் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார். புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்பதுதான். எதற்காக என்றால், தோல்வி பயம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்.

இந்த நிலையில் தான் ரஜினி, புதுமுக இயக்குனராக பா. ரஞ்சித் என்பவருக்கு வாய்ப்பு கொடுத்தார். கபாலி படத்திற்கு முன்னர் பா. ரஞ்சித், மொத்தமே 2 படங்கள் தான் இயக்கி இருந்தார். அந்த படங்கள் அட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ். இரு படங்களுமே வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றன.

பா. ரஞ்சித்துக்கு நல்ல இயக்குனர் என்ற பெயரையும் பெற்று தந்தன. இந்த இரு படங்களையும் உற்று நோக்கினால் அதில் சாதிய நிகழ்வுகள் தெரியும். இதுமட்டுமின்றி படத்தின் பிரதான களமாக சென்னை இருக்கும். இதற்கிடையில் தான் கால் வைக்கும் ஒவ்வொரு மேடையிலும் பா. ரஞ்சித் தன்னை தலித் என்றே கூறினார்.

மேலும் தான் ஒரு புரட்சியாளன் என்பதை நிரூபிப்பது போன்ற வசனங்கள் வேறு அவர் பேச்சில் இருக்கும். இந்த நேரத்தில்தான் ரஜினிகாந்த், பா. ரஞ்சித்தை அழைத்து அவருக்கு தன்னுடைய படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார். அதில் உருவான படம் தான் கபாலி.

இந்த படத்திலும் தலித் அரசியலை, பா. ரஞ்சித் தூக்கி பிடித்திருப்பார். ஆனால் நீங்கள் இந்த படத்தை முழுவதுமாக உற்று நோக்கினால் ஒன்று புரியும். சமூக நீதி தந்தை, பெரியார் படம் கூட படத்தில் இருக்காது. அவரின் வாசனை சுத்தமாக இருக்காது. ஆனால் படம் முழுக்க ரஜினிகாந்த் தலித் அரசியல் பேசுவார்.

அப்போது இதுகுறித்து ஒருவர் கேட்டார். அதற்கு நாசுக்காக பதில் அளித்த பா. ரஞ்சித், “அச்சச்சோ, ஸாரிங்க.. நானும் மறந்திட்டேன். அப்புறம் தான் எனக்கும் தோனிச்சு..” எனக்கு பெரியார் பிடிங்குங்க. அவர் படம் மிஸ் (வைக்க தவறியதற்கு) மன்னித்து விடுங்கள் என்று மழுப்பி இருப்பார்.

ஆனால் ஒன்றை ஒப்புக் கொள்ள வேண்டும். கபாலி படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும். அதில் உள்ள அத்தனை காட்சிகளையும், பா.ரஞ்சித் உள்ளார்ந்த அர்த்தத்துடன் உருவாக்கி இருப்பார். ‘‘மேட்டுக்குடி சப்தம் நாட்டுக்குள் இனி கேட்காது’’ என்பது போன்ற வரிகள் கொண்ட பாடல்களில் அதனை காணலாம். ஆம் படம் முழுக்க தலித் அரசியலை தூக்கி பிடித்து இருக்கும்.

ஆனாலும் இதுபற்றி தனக்கு ஏதுவும் தெரியாதது போன்று ரஜினிகாந்த் மவுனித்து கொண்டார். இந்த நிலையில் தற்போது அடுத்த படம், காலா. காலா என்றால் கரிகாலன், கருப்பு காம்ராஜ் என்றெல்லாம் முதலில் கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் காலா படம் குறித்த தகவல்கள் அப்படியே அமுங்கியது. இந்த படத்தையும் பா. ரஞ்சித்தே இயக்கி உள்ளார். ஆக,. ஒரு புதுமுக இயக்குனருக்கு ரஜினிகாந்த் இரண்டு படங்களை கொடுத்துள்ளார்.

இது சாதாரண நிகழ்வல்ல. இதற்கு பின்னால் தலித் வாக்கு வங்கி அரசியல் உள்ளது என்று அரசியல் நோக்கர்கள் அடித்து கூறுகின்றனர். இதில் உண்மை இல்லை, என்று புறந்தள்ளி விட முடியாது என்பது ரஜியின் அரசியல் நகர்வை பார்த்தால் தெரியும். அதேசமயம் தனது அரசியல் நகர்வு சினிமா படத்ைத பாதித்து விடக் கூடாது என்பதில் ரஜினி உறுதியாக உள்ளார்.

அதனால்தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முதலில் குரல் கொடுத்தார். நான் சொல்வது டுவிட்டரில்.! இதுமட்டுமின்றி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா. ரஞ்சித் கலந்து கொண்டார். பா. ரஞ்சித் பொதுவாக எந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார். ஆனால் அவர் சேப்பாக்கத்தில் ஸ்ெடர்லைட்டுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

ரஜினிகாந்தும் பா. ரஞ்சித்தை விடுவதாக இல்லை. இதற்கெல்லாம் காரணம், அவர் சார்ந்திருக்கும் தலித் வாக்குககளை அப்படியே அள்ளி விட வேண்டும் என்பதுதான். அதற்கான ஒரு அடித்தளமாக தான் காலா படம் நிச்சயம் இருக்கும். இந்த நிலையில் காலா படத்திற்கு தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில், ரஜியின் காலா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த விவகாரம் குறித்து மாநில முதல்வர் குமாரசாமியிடம் கேட்ட போது, ரஜினியின் காலா படத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களின் எண்ண ஓட்டத்தை அரசு கவனத்தில் கொள்ளும்.

அதன் அடிப்படையிலே முடிவு எடுக்கப்படும் என்று கூறி உள்ளார். ஆக, ரஜினி படம் கர்நாடகாவில் ஓடுவதை அம்மாநில மக்கள் விரும்பவில்லை என்பதை அவர் தனது பதிலின் மூலம் ஆணித்தனமாக பதிவிட்டு விட்டார். இதற்கிடையில், தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத ரஜினியின் படத்தை நாங்கள் பார்க்க மாட்டோம் என்று நார்வே மற்றும் ஸ்விட்சர்லாந்தில் ஈழ தமிழர்கள் மட்டுமின்றி தமிழர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த போராட்டம் மேலும் பல்வேறு வெளிநாடுகளுக்கு பரவ உள்ளது.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அவர்களின் வாழ்வியல் போராட்டத்ைத கொச்சைப்படுத்தும் இதுபோன்ற நடிகர்களின் படங்களை நாமும் புறக்கணிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நாம் ஒற்றுமையாக இருந்து உரிமையை பெற்றது போன்று, இதுபோன்ற சந்தர்பவாத நடிகர்களையும் புறந்தள்ளுவோம்.. என்று உலகம் முழுவதும் வாழும் தமிழ் இளைஞர்களின் குரல் ஒலிக்த் தொடங்கி உள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் கால திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையை பரிசீலிக்க தொடங்கி உள்ளது தமிழ் மொழி பேசும் காளையர்கள்.

—–
Leave a Reply