BREAKING NEWS

காயிதே மில்லத் 123வது பிறந்தநாள்:

காயிதே மில்லத் 123வது பிறந்தநாள் விழாவையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவரும், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காயிதே மில்லத். இவரது 123வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய மசூதி வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் பங்கேற்பு

இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலை அவரது நினைவிடத்தில், மலர்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், நிலோபர் கபில் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும், பல்வேறு கட்சித் தலைவர்களும் அவரது நினைவிடத்தில் மலர்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




Leave a Reply