தற்போதைய செய்திகள்
sanjita-chanu-twitter_806x605_51522995062

காமன்வெல்த் 2018 – பளுதுாக்குதல் போட்டியில் 2-வது தங்க பதக்கம் வென்ற இந்தியா……

கோல்டுகோஸ்ட்,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்தியா 2-வது தங்க பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.
சஞ்சிதா சாதனை
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் மொத்தம் 192 கிலோ எடையை தூக்கிய சஞ்சிதா சாதனை காமன்வெல்த் சாதனையை முறியடித்தார்.
வெள்ளி பதக்கம்வென்ற பப்புவா
இப்போட்டியில் பப்புவா நியூ கினியா வீராங்கனை வெள்ளிப்பதக்கமும், கனடா விராங்கனை வெண்கலப்பதக்கமும் வென்றனர். காமென்வெல்த் போட்டியில் நேற்றுமுன்தினம், இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 2 தங்கம், ஒரு வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.




Leave a Reply