BREAKING NEWS

காத்திருப்போர் டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா என்பதை, ரெயில்வே இணையதளமே தெரிவித்துவிடும்.

காத்திருப்போர் நிலையில் உள்ள ரெயில் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பயணிகள்

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில்களில் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், தினந்தோறும் சுமார் 13 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

இதனால், பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் காத்திருக்கும் நிலை டிக்கெட்டுகளாகவும், ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளாகவும் அமைகின்றன. அந்த டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள முடியாதநிலை இருந்தது.

இணையதளம்

இந்நிலையில், அத்தகைய டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே தகவல் சேவை மையம் உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்தின்படி, முன்பதிவு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து, காத்திருக்கும் நிலையில் உள்ள டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை இணையதளம் யூகித்து சொல்லி விடும். இந்த புதிய முறை அமலுக்கு வந்தது.

இது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், எப்போது இருக்கை, அல்லது படுக்கை வசதி உறுதியாகும் என எதிர்பார்த்திருக்க இனி தேவையில்லை. ெரயில்வே துறை டிக்கெட் முன்பதிவு குறித்த கணித்துச் சொல்லும் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

கணித்துகூறும்

இதன் மூலம் ெரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் காத்திருப்போர் பட்டியலி்ல இருந்தால், அவருக்குப் பயணத்துக்கான டிக்கெட் உறுதி செய்யப்படுமா அல்லது ஆர்.ஏ.சியில் வருமா என்பதை அந்த கணித்துக்கூறும் சேவை கூறிவிடும். இதன் மூலம் பயணிகள் முன்கூட்டியே ெரயில் டிக்கெட் நிலவரத்தை தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகள் செய்யலாம்” எனத் தெரிவித்தார்.

இந்த கணித்துக்கூறும் சேவையை அறிமுகம் செய்ய ெரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்தான் காரணமாக இருந்தவர். கடந்த 13 ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கணித்துக்கூறும் சேவையை உருவாக்கக் கோரி ெரயில்வே தகவல் மையத்துக்கு அறிவுறுத்தி, அதை ஒரு ஆண்டுக்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply