BREAKING NEWS

காதல் அழிவதில்லை – சிம்பு

 

 


நடிகர் சிம்பு நிருபர்களுக்கு ேபட்டி அளித்தார். அப்போது அவரிடம்‘‘ இப்ேபாது யாரையாவது காதலிக்கிறீர்களா?’’ என்று கேட்டனர். அதற்கு சிம்பு ‘‘நான் காதல் பண்ணா தான் ஊருக்கே தெரியுமே. யாருக்கும் தெரியலைனா இப்போ யாரையும் லவ் பண்ணலைன்னு அர்த்தம்’’ என்றார் சிரித்து ெகாண்டே.

ேகள்வி: உங்களை ெபாறுத்தவரை காதல் என்றால் என்ன?

சிம்பு: காதல்னா கொடுக்கிறது வாங்குறதில்லை. கொடுக்க ஆரம்பிச்சிட்டா தானா எல்லாம் வந்திடும்.

ேகள்வி: நீங்க காதலித்த ெபண், உங்கள எதிரிலேயே இன்னோருத்தருக்கு ஜோடியாக நடமாடுவதை பார்க்கும் போது உங்க மனசு வலிக்காதா ?

சிம்பு: காதல்னா என்ன? நமக்கு இது வேணும்னு நினைக்கிறது காதல் கிடையாது. அவங்களுக்கு (காதலுக்கு) ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்கிறது தான் உண்மையான காதல். ஒருவரை காதலிக்கும் ேபாது அவங்க நமது கூட இருந்தால் தான் உண்மையான காதல் என்பதை நான் ஒப்பு ெகாள்ள மாட்டேன் அவங்க எங்க வேண்டுமானாலும் இருக்கட்டும். யார் கூட வேண்டுமானாலும் இருக்கட்டும் அவங்க நினைச்சது எதை வேண்டுமானாலும் செய்யட்டும். அவங்க நல்லா இருக்கனும்னு நாம நினைக்கனும்.

உங்க காதல் உண்மையா இருக்குன்னா உங்களுக்கு முதல்ல விட்டு கொடுக்க தெரியனும், உங்களால் விடவே முடியாது பிடிச்சு வைத்து ெகாள்ளத்தான் தெரியும்னு சொன்னால் அதுக்கு ெபயர் காதல் இல்லை பிச்சை.

காதல் என்றுமே அழிவதில்லை. காதலர்கள் தான் அப்ப அப்ப அழிஞ்சிடுராங்க. காதல் ஒருநாள் ஜெயிக்கும்.

ேகள்வி: ரஜினிகாந்த் அரசியலுக்கு வர்றாரே? அதுபற்றி:-

சிம்பு: அவருடைய அரசியலை பற்றி எது சொன்னாலும் இந்த சமயத்தில் சரியா இருக்காது. விட்டுடுங்க

அவருக்கு என் ஆதரவு உண்டான்னு கேட்கிறாங்க அவருடைய அரசியல் எப்படி? என்ன பண்ணப்போறாரு? அப்படி எதுவுமே ெதரியாத நிலையில் இப்ப எதுவும் சொல்றது சரியாக இருக்காது என்பது என் கருத்து.

இவ்வாறு சிம்பு கூறினார்.




Leave a Reply