BREAKING NEWS

காஞ்சிபுரம் அத்தி வரதர் விழா செய்திகளை சிறப்பாக வெளியிட்ட தினச்செய்தி நாளிதழுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

காஞ்சிபுரம் அத்தி வரதர் விழா செய்திகளை சிறப்பாக வெளியிட்ட ‘தின செய்தி’ நாளிதழுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அத்திவரதர் விழா
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிலுக்குள் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து ஆதி அத்திகிரி வரதர் மூலவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளிய அரிய நிகழ்வு 1.7.2019 முதல் 17.8.2019 வரை நடைபெற்றது. இந்த விழாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில், தினமும் அத்தி வரதர் எந்த கோலத்தில் காட்சி அளித்தார்.
ஒவ்வொரு நாளும் விழாவிலும் அத்திவரதர் என்ன வர்ணத்தில் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார், தினமும் என்னென்ன வர்ணங்களில் மாலை அணிவித்திருந்தார். சிறப்பு அலங்காரங்கள், தினமும் எவ்வளவு பக்தர்கள் வருகை புரிந்தனர், போலீஸ் பாதுகாப்பு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அறநிலைத்துறை சார்பில் என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது, என்பது பற்றிய தகவல்கள் ‘தின செய்தி’ பத்திரிகையில் தினமும் வண்ண படங்களுடன் ெவளியிடப்பட்டது.
‘தினசெய்தி’க்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ்
மேலும், விழா நாட்களில் நடை திறக்கும் நேரம்நடை சாத்தும் நேரம், வி.ஐ.பி.கள் எந்த நேரத்தில் வருகை புரிகின்றனர், யார்யார் வருகை தந்தனர்.
கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது, பக்தர்கள் வசதிக்காக பேருந்து வசதிகள் எவ்வாறு இயக்கப்பட்டது. நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் எங்கெங்கு உள்ளது, உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தினமும் ‘ தின செய்தி’ நாளிதழில் செய்திகள் வெளியிடப்பட்டது.
அத்திவரதர் விழா நடைபெற்ற 48 நாட்களிலும் தினமும் ‘தின செய்தி’ நாளிதழில் செய்திகள் வெளியிட்டு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து, பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் பொன்னையா அளித்தார்.

 




Leave a Reply