BREAKING NEWS

களைகட்டியது நாவல் பழ சீசன்

 

 

 

சர்க்கரை நோய்க்கு மருந்தான நாவல் பழ சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது.

விளைச்சல்

கருநீல வண்ணத்தில் காணப்படும் நாவல் பழம் மீது ஆவல் இல்லாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக, சர்க்கரை நோய்க்கு இப்பழம், ஒரு அருமருந்தாகவும் விளங்குகிறது. எனவே, நீரிழவு நோயாளிகள் இவற்றை விரும்பி உண்பார்கள்.தென்மாவட்டங்களில் நாவல் மரங்கள் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, சி.க.வலசு, கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, கேதையுறம்பு, ஜவ்வாதுபட்டி, இடையகோட்டை, போடுவார்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அதிகளவு உள்ளன. தேனி மாவட்டத்திலும் அதிகளவு உள்ளன.

விற்பனை

இவ்வூர்களில் எல்லாம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட நாவல் மரங்கள் இருந்தன. தற்போது விரல் விட்டு எண்ணும் அளவில்தான் நாவல் மரங்கள் உள்ளன. இங்கு விளையும் பழங்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது சீசனை ஒட்டி ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் விற்பனை சூடு பிடித்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த சிறு வியாபாரிகள் மரங்களில் இருந்து பறித்து வரும் நாவல் பழங்களை டம்ளர் கணக்கில் ரூ.10 முதல் ரூ.20 வரையும், ஒரு கால் படி கணக்கில் ரூ.20 முதல் ரூ.25 வரையும் விற்பனை செய்கின்றனர். இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்குகின்றனர்.




Leave a Reply