BREAKING NEWS

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள ஆலமட்டி அணைக்கு நீர்வரத்து 2 லட்சம் கனஅடியாக உள்ளது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், அரசு கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. . கன மழையால் பல மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. பெலகாவி, கடாக், கோப் பாய் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. ஒரே நாளில் கன மழைக்கு 5 பேர் பலியாகினர்.

அங்கு ஏற்கனவே மழையால் கடந்த 3 நாட்களில் மட்டும் 9 பேர் பலியாகி இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 5000 வீடுகள் சேதமாகின. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *