தற்போதைய செய்திகள்

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியைமைப்பது உறுதி

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியைமைப்பது உறுதி

தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
திருச்சி, மே 16-

கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி என்று தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பா.ஜ.க.வினரும், காங்கிரசும், ம.ஜ.த.வினரும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. ஆட்சி உறுதி

கர்நாடகாவில் நிச்சயமாக பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி. மக்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மேலும், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான், தமிழகத்தின் நல்லுறவு சீராக பாதுகாக்கப்படும். காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். குமாரசாமி காவிரியை தமிழகம் சொந்தம் கொண்டாட முடியாது என்றுள்ளார். தமிழகத்திற்கு 5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று சித்தராமையாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.

தமிழகத்துக்கு தண்ணீர்

காவிரி வரைவு திட்டம் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். நதிநீரை பங்கிடும் போது, எந்த மாநிலமும் வஞ்சிக்கப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி செய்த போது, காவிரி விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது மு.க.ஸ்டாலின் மதசார்ப்பற்ற கட்சிகள் இணைய வேண்டிய காலகட்டம் இது என்கிறார். மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 15 உயிர்களை பலி வாங்கி இருக்கிறார்.

மாற்றம்

கர்நாடகா தேர்தல் மூலம் பிரிவினையை உருவாக்கிய வாட்டாள் நாகராஜ், லிங்காயத் விவகாரத்தில் சித்தராமையா ஆகியோருக்கு சரியான அடி விழுந்துள்ளது. கர்நாடகா தேர்தலில் ஓட்டு சதவீதத்தை விட மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். மக்களின் மனநிலை பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. 40 இடங்களில் இருந்து 104 இடங்களுக்கு வந்திருக்கிறது. மிகப்பெரிய கூட்டணி இல்லாமல், எதிர்மறை விமர்சனங்களை தாண்டி வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply