தற்போதைய செய்திகள்

கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு காவிரி நீர் வேண்டும்

கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்துக்கு காவிரி நீர் வேண்டும்


அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சென்னை, மே 17-

கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் கட்சி காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி செயல்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மாநாடு

டெல்லியில் நேற்று நடைபெற்ற மாநில நீர்வளத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைத்தால் தமிழகத்திற்கு இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய 4 டி.எம்.சி தண்ணீர் கிடைத்து விடும்.

மாநில அரசியல்

கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டும் என்பது தான் தமிழக அரசின் முக்கிய நோக்கம். கர்நாடகாவில் யார் அட்சியமைக்கின்றனர் என்பது அந்த மாநில அரசியல். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் கட்சி காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.தான் சாம்பியன். அ.தி.மு.க முன்பு எந்த ஜூனியர்ஸும் நிலைக்கப் போவதில்லை. அ.தி.மு.க.வில் எல்லோரும் சீனியர் சாம்பியன்ஸ்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
Leave a Reply