தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் அதிரடி மாற்றங்கள்

கர்நாடகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் அதிரடி மாற்றங்கள்

பெங்களூரு

கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

அதேசமயம், தென் மாநிலத்துக்கு நுழைவு வாயிலான கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்பதற்காக மதர்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமியிடமும் ரகசியப் பேச்சுகளை பாஜகவினர் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கும் கடந்த 12-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில், மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது தொங்கு சட்டசபை அமையும். பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரியவந்தது.

ஆனால், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி இருந்தது. இரு கட்சிகளும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு முந்தினர். ஆனால், ஒரு கட்டத்தில் பாஜக அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெறத் தொடங்கியது.

தற்போது பாஜக 106 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 75 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி 38 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

ஒரு கட்டத்தில் தனிப்பெரும்பான்மைக்கும் அதிகமாகச் சென்ற பாஜக திடீரெனக் குறைந்து, தனிப்பெரும் கட்சியாக மாறியது. தனிப்பெரும்பான்மை பெறுவதில் இருந்து தவறியது.

பாஜகவுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் பற்றாக்குறையானது. சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவு பெற்றாலும் பாஜக ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இல்லை.

தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம், யாரிடமும் கூட்டணிக்கு பேசமாட்டோம் என்று கூறிய காங்கிரஸ் கட்சியும், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் வெற்றி பெறவில்லை.

இதனால் தனது வியூகத்தை மாற்றிய காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி அமைக்கமுடியாவிட்டாலும் பரவாயில்லை, பாஜக ஆட்சியில் அமரக் கூடாது என்று காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டது.

அதற்கு அச்சாரமாக, டெல்லியில் இருந்து நேற்று இரவு புறப்படும்போதே, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட், வேணுகோபால் ஆகியோர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர்.

அதில் ஒருவேளை தனிப்பெரும்பான்மை தங்களுக்குக் கிடைக்காவிட்டால், கூட்டணி ஆட்சி குறித்து ஆலோசிக்கலாம், ஆனால், பாஜகவை ஆட்சி அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று பேசியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்கு ஏற்றார்போல், வாக்கு எண்ணிக்கையிலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, தனக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆட்சியமைக்கக் கூறி, நிபந்தனையற்ற ஆதரவு தர காங்கிரஸ் கட்சிமுடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோரைச்சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தினர்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிதான் மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை முடிவு செய்யும் கிங்மேக்கராக வலம்வரும் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தேவகவுடாவைப் பொறுத்தவரை கடந்தமுறை பாஜகவின் ஆதரவால் ஆட்சி அமைத்து பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்துவிட்டார். ஆதலால், இனிமேல் பாஜகவின் ஆதரவோடு ஆட்சி அமைக்கவோ அல்லது ஆட்சியில் இணைந்து அங்கம் வகிக்கவோ அவர் தயாராக இல்லை. இதைச் சமீபத்தில் ஒருபேட்டியில் தேவகவுடாவே தெளிவாகத் தெரிவித்துவிட்டார்.

அதேசமயம், இதற்கு முன் கடந்த 2004-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அப்போதைய முதல்வர் தரம்சிங்குக்கு ஆதரவு அளித்து இருந்தது தேவகவுடா கட்சி.

ஆனால், பாஜகவுடன் ஆட்சியை பங்கீட்டுக் கொள்ளும்போதுதான் சிக்கல் ஏற்பட்டது அந்த கசப்பான உணர்வு இன்னும் அவரை விட்டு நீங்காமல் இன்றும் இருந்து வருகிறது.

அதன் காரணமாக காங்கிரஸ் கட்சி இப்போது அளிக்கும் ஆதரவை அவர் ஏற்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க அதிகமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஒருபக்கம் பாஜக ஆட்சி அமைக்க தடைஏற்படுத்திவரும் நிலையில் அதை உடைக்க பாஜகவும் ரகசியமாக குமாரசாமியை அணுகி பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தேவகவுடாவைப் பொறுத்தவரை பாஜகவின் கடந்தகால செயல்பாடுகளால் தீவிரமான வெறுப்பிலும், எதிர்ப்பிலும் இருந்து வருகிறார். ஆனால், அவரின் மகன் குமாரசாமி, பாஜகவின் பக்கம் சாய்வதற்குத் தயாராகவே இருக்கிறார். அதைப் பயன்படுத்தி பாஜகவின் மூத்த தலைவர்கள் குமாரசாமியை அணுகிப் பேசிவருகிறார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக தேவகவுடாவுக்கும், அவரின் மகனுக்கும் இடையே கட்சி விவகாரங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. ஒரேவேளை காங்கிரஸ் ஆதரவை விலக்கி, பாஜகவின் துணையுடன் ஆட்சி அமைக்கக் குமாரசாமி விரும்பினால் அதுவும் தேவகவுடாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும், கட்சிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஆனால், இதுபோன்ற சூழல் வந்தால் தான் என்ன செய்வேன் என்று ஏற்கெனவே ஒருகூட்டத்தில் தேவகவுடாவும் பேசியுள்ளார். பாஜகவின் துணையோடு இனியொரு முறை குமாரசாமி கூட்டணிக்கு ஆசைப்பட்டால், அவரைக் குடும்பத்தில் இருந்தே விலக்கி வைத்து விடுவோம் என்று எச்சரித்துள்ளார். ஆதலால், குமாரசாமியின் விருப்பத்துக்கும் தேவகவுடா செக் வைத்து இருக்கிறார்.

கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்ற காங்கிரஸ் கட்சியின் வியூகம் வெற்றி பெறுமா அல்லது, அனைத்து சாணக்கியத்தனத்தையும் அடித்து நொறுக்கி மோடி, அமித்ஷா தந்திரங்கள் பாஜவை ஆட்சியில் அமரவைப்பார்களா என்பது போகப்போகத் தெரியும்.

அரசியல் களம் சூடேறிவரும் நிலையில், காட்சிகள் பெரும் பரபரப்போடு நகர்ந்து வருகின்றன.

இவை அனைத்தையும்விட, ஆளுநர் வஜுபாய் வாலா என்ன செய்யப்போகிறார், எந்தக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரும்பான்மை உள்ள கட்சியை அழைப்பாரா அல்லது தனிப்பெரும் கட்சியை அழைப்பாரா என்பதும் தெரியவில்லை. கோவா நி
Leave a Reply