BREAKING NEWS

கருணாநிதியை தவிர்த்துவிட்டு திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது – துரைமுருகன் பேச்சு.

 

கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க பொருளாளர் துரைமுருகன் கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது என பேசினார்.

புகழஞ்சலி

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி புகழஞ்சலி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் ஆங்கிலத்தில் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

கருணாநிதி ஒரு அறிவாளி, மெய் மறக்க செய்யும் வகையில் பேசும் திறன் பெற்றவர். அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். குமரி முனையில் நின்று இமயத்தைத் தொட்டுப் பார்த்தவர்.

அகில இந்திய அரசியலில் ஆளுமை பெற்றவர் கருணாநிதி. வங்கிகளை தேசியமயமாக்கலாம் என்ற பொருளாதாரக் கொள்கையை அறிவித்தவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. கருணாநிதி சிறந்த பேச்சாளர், சிறந்த வசனகர்த்தா.சிறந்த நிர்வாகி, கட்சியை திறம்பட கட்டிக் காத்தவர். மனித மனங்களைப் புரிந்து கொண்ட மகத்தான மனிதர் கருணாநிதி.

செம்மொழி

50 ஆண்டுகள் திமுகவை திறம்பட தலைமை தாங்கி நடத்தியவர் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி. செம்மொழி தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர் கருணாநிதிஇந்திய அரசியல் அரங்கில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதி.

கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது என கூறினார்.தெலுங்குதேசம் எம்.பி. ஒய்.எஸ்.சவுத்ரி பேசும் போது பன்முக திறமை கொண்டவர் கருணாநிதி. கருணாநிதியின் இடத்தை யாரும் பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்தார்.




Leave a Reply