BREAKING NEWS

கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை – அமைச்சர் மாபா.பாண்டியராஜன் விளக்கம்.

 

 

அமைச்சர் கருத்து

நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப் போவதாக கடந்தாண்டு இறுதியில் அறிவித்தார். அதன்பின்னர், தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனப் பணிகளில் கவனம் செலுத்தினார். பின்னர், வழக்கம்போல தனது பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்த்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் பல்வேறு விஷயங்களில் அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதால், அவர் அ.தி.மு.க.வில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன்தினம் அமைச்சர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஆதரவு கருத்துக்கள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி கேட்கப்பட்டதால், அப்படி பதில் கூறினேன். ஏனென்றால் ரஜினிகாந்த் பல விஷயங்களில் எங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல் 8 வழிச்சாலை திட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். எனவேதான் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.

பலம் இல்லை

ஆனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை. ஏனெனில் இவர்களுக்கு அடிமட்ட அளவில் போதிய பலம் இல்லை. ரஜினிகாந்தாவது பூத் கமிட்டி அமைத்து அடிமட்ட அளவில் கொஞ்ச முயற்சிகள் செய்தார். ஆனால், கமல்ஹாசன் அடிமட்ட அளவில் பலத்தை உருவாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து 5 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெறமுடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கமல் தி.மு.க. பக்கம் சாய்கிறார்

அமைச்சர் குற்றச்சாட்டு (பாக்ஸ்)

அமைச்சர் பாண்டியராஜன் பேசும்போது, பல வி‌ஷயங்களில் கமல்ஹாசன் தி.மு.க. பக்கம் சாய்ந்து செயல்படுகிறார். அவர் கட்சி தொடங்கிவிட்டார். கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டார். ஆனால், பல வி‌ஷயங்களில் ஒரு தெளிவான முடிவை சொல்ல முடியவில்லை.உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் அவர்கள் செயல்பட முடியாமல் அவர்கள் கட்சி பின்னோக்கிச் செல்லும் நிலை ஏற்படும் என்று பேசினார்.




Leave a Reply