BREAKING NEWS

கன்னியாகுமரியில் மழை: 100 டன் ரப்பர் உற்பத்தி குறைவு.

குமரியில் மே மாதம் ரப்பர் பால் வடிப்பு தொடங்கினாலும் மழை பெய்து வருவதால் ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரமாக பருவமழை தொடர்ந்து பெய்வதால் ரப்பர் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குமரிமாவட்டத்தில் சாதாரண காலங்களில் தினமும் 200 முதல் 250 டன் வரை ரப்பர் உற்பத்தியாகும். ஆனால் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தினமும் 150 டன் என்ற அளவுக்கு ரப்பர் உற்பத்தி குறைந்துள்ளது.

இதனால் ரப்பர் பால்வடிப்பு மற்றும் அதை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் முதிர் ரப்பர் மரங்களை வெட்டி கேரளாவுக்கு ெகாண்டு செல்லும் பணியும் நடந்து வருகிறது. மழை காரணமாக முதிர் மரங்களை முறிக்கும் பணியும் தடைபட்டு தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.




Leave a Reply