BREAKING NEWS

கதை திருட்டு பிரச்சினை பற்றிய படம் ‘படைப்பாளன்’

.எல். எஸ்.தியன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்..நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ள படம் ‘‘படைப்பாளன்‘‘. இப்படத்தை எல்.எஸ். பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். சினிமா உலகில் நடக்கும் கதைத்திருட்டு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது.
படத்தில் கதாநாயகனாக இயக்குனர் பிரபுராஜாவே நடிக்க கதாநாயகியாக புதுமுகம் அஷ்மிதா நடித்து இருக்கிறார்.
மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் – விக்கி, , வளவன், திருச்சி வேலுச்சாமி. ஆகியோரும் நடிக்க வேல முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை யில் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம் பி யுமான எஸ்.திருநாவுக்கரசுவும், பட அதிபர் கலைப்புலி எஸ் தாணுவும் கலந்து கொண்டு ஆடியோவை வெளீயிட்டு பேசினார்கள்.
விழாவில் இயக்குநர் பிரபுராஜா பேசுகையில் “. இங்கு கதைத்திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா.
சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனி காரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது.
ஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும் போது அவங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும்.
இந்தப்படத்தில் பல உண்மைகளை சொல்லி இருக்கிறோம். யாரையும் காயப்படுத்தணும்னு இந்தப்படத்தை எடுக்கவில்லை. ” என்றார்
.மற்றும் இசை அமைப்பாளர் கிருபாகரன் இயக்குநர் சீனு ராமசாமி, பாடலாசிரியர் சினேகன் , நடிகர் மனோபாலா ,ஜாக்குவார் தங்கம் ஆகியோரும் பேசினார்கள்.




Leave a Reply