தற்போதைய செய்திகள்
priya

`கண்களால் கவிதை படித்த’ கனவு நாயகியை கைது செய்யுமா காவல்துறை? முஸ்லிம்களின் மத உணர்வை புண்படுத்தும் பாடல் எனப் புகார்….

ஐதராபாத்,

கண்களால் கவிதை படித்த கனவு நாயகியான நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு எதிராக ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர் கைது செய்யப் படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரியா பிரகாஷ் வாரியார்

விரைவில் வெளிவர இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ பாட்டின் மூலம் பிரபலமானவர், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
முகபாவனை
அந்தப் பாடலில் சில நிமிடங்கள் தோன்றி மறைந்தாலும், தனது முக பாவனைகளால் லட்சக்கணக்கான இளவட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது க்யூட் எக்ஸ்பிரஷன்கள், சமூக வலைதளங்களில் இவருக்கென தனி ரசிகர்களை உண்டாக்கியது. இவரது கண் அசைவை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகி பேஸ்புக் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
புகார்
இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் பெரிய நடிகர்களுக்குக் கிடைத்த வரவேற்பைவிட சில நாள்களிலேயே இவருக்கு மில்லியன் கணக்கில் பாலோயர்கள் கிடைத்தார்கள்.
இந்த நிலையில், பிரியா பிரகாஷுக்கு எதிராக ஹைதராபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில் இந்தப் பாடல் அமைந்துள்ளது என முகமது அப்துல் முக்கித் என்பவர், படத் தயாரிப்பாளர் மற்றும் பிரியா பிரகாஷ் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் இறை தூதர் முகம்மது நபியின் வாழ்க்கையை வகையில் பாடல் வரிகள் இருப்பதாக புகார் கூறியுள்ளார். பிரியா மீது புகார் தொடுக்கப்பட்டுள்ளது, சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாடலில் ஆட்சேபணைக்குரிய எதுவும் இல்லை என்று இயக்குநர் உமர் லுலு மறுத்திருக்கிறார்.

இயக்குநர் உமர் லுலு, இசை அமைப்பாளர் ஷான் ரஹ்மான், பாடலாசிரியர் பிஎம்ஏ ஜப்பார் என இந்தப் படத்தை உருவாக்கிய முக்கிய கலைஞர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Leave a Reply