கட்சி தலைமை அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன் என்று திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.மரக்கன்று நடவுநீட் தேர்வால் அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது நினைவாக குழுமூரில் அனிதா படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அனிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நூலகத்தை சுற்றிப்பார்த்த அவர், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தி.மு.க. இளைஞரணி சார்பில் புத்தகங்களை வழங்கி உறுப்பினராக இணைந்தார். முன்னதாக அனிதா நூலக வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார்.இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நீட் எதிர்ப்பு போராளி அனிதா நினைவு நூலகத்திற்கு தி.மு.க.வினர் தேவையானவற்றை செய்து கொடுத்துள்ளனர்.
அனிதா சகோதரர் மணிரத்னம் கேட்டுக்கொண்டதன் காரணமாக நூலகத்தில் தேவையான புத்தகங்களை வழங்கி உறுப்பினராக இணைந்துள்ளேன் என்றார்.தலைமை அறிவித்தால் போட்டிஅப்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. தலைமை அறிவித்தால் போட்டியிட தயாராக உள்ளேன் என்றார்.