BREAKING NEWS

கடன் வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு.

 

பவர் ஸ்டார்

சென்னை புது வண்ணாரப்பேட்டை, அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் தயாநிதி (வயது 32). கார் டிரைவரான இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதனால் தயாநிதி சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் நட்பு கிடைத்தது.

அப்போது சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பவர் ஸ்டார் சீனிவாசன் கூறி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, தி.நகர் திருமூர்த்தி நகர் அலுவலகத்தில், பவர் ஸ்டார் சீனிவாசனை சந்தித்த, தயாநிதி தொழில் தொடங்குவது குறித்து பேசி உள்ளார்.

மோசடி

அதற்கு பைனான்சியர் ஒருவர் தெரியும் என்றும் அவரிடம் பேசி ரூ.30 லட்சம் கடன் பெற்று தருகிறேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் கூறி உள்ளார். இதை தயாநிதியுடன் நம்பி விட்டார். இந்த நிலையில் ஆவணங்கள் தயார் செய்ய வேண்டும் பணம் வேண்டும் என்று கூறி தயாநிதியிடம், பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.4 லட்சத்து 16 ஆயிரம் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் தயாநிதிக்கு கடன் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் தயாநிதி கொடுத்த பணத்தையும், பவர் ஸ்டார் சீனிவாசன் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடன் வாங்கி கொடுங்கள் அல்லது நான் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள் என்று தயாநிதி கேட்டு உள்ளார்.

வழக்குப்பதிவு

இதையடுத்து தட்சிணாமூர்த்தி என்கிற பைனான்சியர் கடன் கொடுத்து விட்டதாக, ரூ.30 லட்சத்திற்கான காசோலையை, தயாநிதியிடம் பவர் ஸ்டார் சீனிவாசன் கொடுத்துள்ளார். அந்த காசோலை வங்கியில் போட்டபோது, பணம் இல்லாமல் திரும்ப வந்தது.

இதை தொடர்ந்து, பவர் ஸ்டார் சீனிவாசன் மீது தயாநிதி புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடினார். இந்த நிலையில் போலீசார் நீதிமன்ற உத்தரவின் பேரில், பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

—-

படவிளக்கம்

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்

————




Leave a Reply