BREAKING NEWS

கடந்த மார்ச் மாதத்தில் வேளாண் சார்ந்த வங்கி கடன் வழங்கல் அதிகரிப்பு பாரத ரிசர்வ் வங்கி தகவல்.

மார்ச் மாதத்தில் வேளாண் சார்ந்த வங்கி கடன் வழங்கல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் மே 11ந் தேதி வரையிலான இரண்டு வாரங்களில் வங்கிகளின் கடன் அளவு 12.64 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது பாரத ரிசர்வ் வங்கியின் அறிக்கை வாயிலாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வைப்பு தொகை உயர்வு

2018 மார்ச் 11ம் தேதி நிறைவடைந்த வாரத்தில் இந்திய வங்கிகளின் கடன் அளவு 12.64 சதவீத உயர்வுடன் ரூ.85 லட்சத்து 51 ஆயிரத்து 99 கோடியாக உள்ளது. 2017ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வங்கிகளின் கடன் அளவு ரூ.75 லட்சத்து 90 ஆயிரத்து 941 கோடியாக இருந்தது.

அதேபோல, 2017 ஏப்ரல் 28ம் தேதியன்று ரூ.75 லட்சத்து 82 ஆயிரத்து 391 கோடியாக இருந்த வங்கிக் கடன் 2018 ஏப்ரல் 27ஆம் தேதியன்று 12.61 சதவிகித உயர்வுடன் ரூ.85 லட்சத்து 38 ஆயிரத்து 570 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கிகளில் செலுத்தப்பட்ட டெபாசிட் (வைப்பு) தொகையும் 7.61 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.

வேளாண்மை கடன்

அதாவது, 2017 மே 12ம் தேதியில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 86 ஆயிரத்து 83 கோடியாக இருந்த டெபாசிட் தொகை 2018 மே 11ந் தேதி நிறைவடைந்த வாரத்தில் ரூ.1 கோடியே 13 லட்சத்து 92 ஆயிரத்து 165 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, 2018 ஏப்ரல் 27ம் தேதி நிறைவடைந்த வாரத்தில் டெபாசிட் தொகை 8.20 சதவிகித வளர்ச்சியுடன் ரூ.1,14,30,786 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் உணவுத் துறை சாராத வங்கிக் கடன் 8.4 சதவிகிதம் உயர்ந்துள்ளதும், வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான கடன் 3.8 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இவ்வாறு பாரத ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

—–




Leave a Reply