BREAKING NEWS

“ஓ.பன்னீர்செல்வத்தையும், என்னையும் பிரிக்க முடியாது” துரைமுருகனுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்.

 


துணை முதல்-அமைச்சருடனான எங்களது ஒற்றுமையை பிரிக்க முடியாது என்று துரைமுருகனுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

ஸ்டாலின் பேச்சு

சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், ‘ 2017-ம் ஆண்டு காவல்துறை மானியக்கோரிக்கையில் 50 அறிவிப்புகள் அறிவித்தீர்கள். அந்த அறிவிப்புகள் எந்தநிலையில் இருக்கிறது’ என்றார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர், ‘377 அறிவிப்புகள் அறிவித்தார். அதில் 290 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன. 79 அறிவிப்புகள் பணியில் இருக்கிறது. 3 அறிவிப்புகள் கைவிடப்பட்டன. 2017-–ம் அறிவித்த அறிவிப்புகளில் 9 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. 13 அறிவிப்புகள் பணியில் இருக்கிறது’ என்றார்.

துரைமுருகன்

அப்போது குறிகீட்டு பேசிய துறைமுருகன், ‘முதல்வர் இங்கே பேசும்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அறிவிப்புகளில் எந்தனை நிறைவேற்றப்பட்டன. என்று சொன்னீர்கள். அதோடு, நீங்கள் முதல்வராக இருந்து அறிவித்த அறிவிப்புகளில் எந்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சொன்னீர்கள். ஆனால் இடையில் முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த அறிவிப்புகளில் என்ன நிலை என்பது குறித்து சொல்லவில்லையை’ என்றார்.

பிரிக்க முடியாது

அப்போது முதல்வர் குறிக்கீட்டு பேசுகையில், ‘ரொம்ப நல்லா பேசுகிறீங்க. நாங்கள் ஒண்ணா இருப்பது உங்கள் கண்ணை உறுத்துகிறது. ஆகேவ, அதை எந்த ரூபத்திலும், எப்படி வந்தும் எங்களது ஒற்றுமையை பிரிக்க முடியாது’ என்றார்.




Leave a Reply