BREAKING NEWS

ஓ.என்.ஜி.சி. லாபம் ரூ.6,143 கோடி.


 

மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.6,143 கோடி லாபம் ஈட்டியுள்ளது.இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலை உயர்ந்ததையடுத்து ஓஎன்ஜிசி-யின் முதல் காலாண்டு நிகர லாபம் கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் ரூ.6,143.88 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.3,884. கோடியுடன் ஒப்பிடுகையில் இது 58.1 சதவீதம் அதிகமாகும்.இதற்கு முன்பாக, ஓஎன்ஜிசி 2013 டிசம்பர் காலாண்டில் அதிகபட்சமாக ரூ.7,126 கோடி லாபத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியிலிருந்தும் கிடைக்கும் லாபம் 48.42 டாலரிலிருந்து 47.6 சதவீதம் அதிகரித்து 71.48 டாலராக உயர்ந்ததாக ஓஎன்ஜிசி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.




Leave a Reply