தற்போதைய செய்திகள்

ஓகி புயல் தாக்குதலால் உயிரிழந்த,5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு….

சென்னை,
ஒகி புயல் தாக்குதலால் உயிரிழந்த 2 மீனவர் உள்பட 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கிட எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மரம் முறிந்து பலி
இதுகுறித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓகி புயலினால் ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம், பைங்குளம், குழித்தட்டு விளையைச் சேர்ந்த ரெத்தினசாமி, வடசேரி, வடக்கு வீதியைச் சேர்ந்த தியாகராஜன் மற்றும் செங்கோடி, வாழவிளை மாத்தூரைச் சேர்ந்த அன்னம்மாள் ஆகிய மூவரும் பலத்த காற்றின் காரணமாக மரம் முறிந்து விழுந்து உயிரிழந்தனர்.
குமரி மீனவர்
கன்னியாகுமரி மாவட்டம், இணையம் புத்தன்துறையைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, புயலின் காரணமாக காணாமல் போன மீனவர்களில் சூசைய்யா மற்றும் ஜெர்மியான்ஸ் ஆகிய இருவரின் சடலம் 3.12.2017 அன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
முதல்வர் இரங்கல்
மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த ரெத்தினசாமி, தியாகராஜன் மற்றும் அன்னம்மாள் மற்றும் மீனவர்கள் சூசைய்யயா, ஜெர்மியான்ஸ் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply