BREAKING NEWS

ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய  ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்திற்கு சச்சின் பாராட்டு.


இங்கிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட்ஜ் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னி்ங்சை தொடங்கியது. 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து விக்கெட் இழக்கவில்லை. அதன்பின் ஹர்திப் பாண்டியாவின் மாயாஜால ஸ்விங் பந்தில் இங்கிலாந்து சரணடைந்தது. அவர் 6 ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன் உடன் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

முதன்முறையாக 5 விக்கெட்கள்

இதன்மூலம் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். ஐந்து விக்கெட்டும் சாதாரணமான விக்கெட் அல்ல. ஜோ ரூட் (16), பேர்ஸ்டோவ் (15), கிறிஸ் வோக்ஸ் (8), அடில் ரஷித் (8), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகிய விக்கெட் ஆகும். அதேபோல் இந்த டெஸ்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அபாரமாக செயல்பட்டார். பறந்தது பறந்தும், டைவ் அடித்தும் கேட்ச் பிடித்தார். அவர் ஐந்து கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் அறிமுக போட்டியிலேயே ஐந்து கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார்.விக்கெட்டிற்கு முன்னாடியும், விக்கெட்டிற்கு பின்னாடியும் அசத்திய ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பந்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுகல் பாராட்டு தெரிவித்துள்ளார்.




Leave a Reply