BREAKING NEWS

ஒருநாள் போட்டி அந்தஸ்து பெற்ற நேபாளம் – முதன்முதலாக நெதர்லாந்துடன் விளையாடுகிறது.

 

சர்வதேச அளவிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் முதன்முறையாக நெதர்லாந்தை எதிர்த்து நேபாளம் விளையாடுகிறது.

ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் முதல் 8 அணிகளில் ஒன்றாக வந்த நேபாளம் அணிக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அந்தஸ்து கிடைத்தது. 10 அணிகளில் பவுவா நியூ கினியா, ஹாங் காங் அணிகள் அந்தஸ்து பெறவில்லை. ஒருநாள் போட்டியில் அந்தஸ்து பெற்ற நேபாளம் முதன்முறையாக நெதர்லாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது.

நெதர்லாந்து சம்மதம்

இதற்கு நெதர்லாந்து கிரிக்கெட் போர்டும் சம்மதம் தெரிவித்தது. முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1-ந்தேதியும், 2-வது போட்டி 3-ந்தேதியும் வூர்பர்க் கிரிக்கெட் கிளப்பில் நடக்கிறது.நெதர்லாந்து அணி 2014-ல் ஒருநாள் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை இழந்தது. 2015-ல் உலக சாம்பியன் லீக் தொடரில் சாம்பியனப் பட்டம் வென்றதால் மீண்டும் அந்தஸ்து பெற்றது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் முதல் போட்டியில் இந்தியாவையும், அயர்லாந்து பாகிஸ்தானையும் எதிர்கொண்டது.




Leave a Reply