BREAKING NEWS

ஐய்யப்பன் கோவிலில் மாலை போட்டார் சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக சுந்தர் சி இயக்கிய ‘வந்தா ராஜாவாதான் வருவேன்‘ படம் வெளிவந்தது. அதன்பிறகு சிம்புக்கு படங்கள் எதுவும் இல்லை.
அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளீயானது. ஆனால் சிம்பு அப்படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டே வந்ததால் நொந்து போன பட அதிபர் சுரேஷ் காமாட்சி அப்படத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்தார்.
சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதோடு வேறு நடிகரை வைத்து மாநாடு பட வேலைகளை தொடங்கவும் திட்டமிட்டனர். இந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
அப்போது சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளிடம் பேசினார். ‘‘சிம்பு இனி மாநாடு படப்பிடிப்பில் சரியாக வந்து கலந்து கொள்வார். அவரால் படம் இனி தாமதம் ஆகாது’‘ என்ற உறுதியை கொடுத்தார்.
அதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘‘ சிம்பு படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் ‘‘என்று கூறினார்.
அவரது கோரிக்கையை ஏற்று சிம்பு தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இதற்கிடையில் மாநாடு படப்பிரச்சினை நல்ல படியாக தீர்வானால் சபரி மலைக்கு வருவதாக சிம்பு ஐய்யப்பனிடம் வேண்டி இருந்தார். இப்போது பிரச்சினை சுமூகமாக தீர்ந்ததையொட்டி சிம்பு நேற்று காலை சென்னையில் உள்ள ஐய்யப்பன் கோவிலுக்கு சென்று மாலை போட்டுக் கொண்டார். 40 நாட்கள் விரதம் இருந்து சபரி மலை செல்கிறார்.
மாலை போடும் நிகழ்ச்சியில் பட அதிபர் சுரேஷ் காமாட்சியும் கலந்து கொண்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *