BREAKING NEWS

ஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஐந்து சென்சார்கள் கொண்ட பாப் அப் கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இவை பயனர் வைத்திருப்பதை பொருத்து பிரைமரி அல்லது செல்பி கேமரா என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஸ்மார்ட்போனின் வரைபடங்களின் படி இதில் மெல்லிய பெசல்கள், டிஸ்ப்ளே நாட்ச் இல்லாதது தெளிவாக தெரிகிறது. ஆகஸ்ட் 20-ம் தேதி விண்ணப்பிக்கப்பட்ட காப்புரிமைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, கடந்த வாரம் அச்சிடப்பட்டுள்ளது. காப்புரிமையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பாப்-அப் தெரிகிறது.இவைதவிர சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போன் ஐந்து கேமராக்களுடனும் சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐந்து கேமரா சென்சார்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன.

சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் லென்ஸ் 5X டெலிபோட்டோ லென்ஸ் போன்று செயல்படுகிறது. இத்துடன் 12 எம்.பி. சென்சார், 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் மற்றும் டூயல் எல்.இ.டி. பிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.இத்துடன் 6.47 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 5260 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *