தற்போதைய செய்திகள்
sengottaiyan-3

ஏ.சி.டி நிறுவனம் மூலம், தமிழகம் முழுவதும்,அரசு பள்ளிகளுக்கு வைபை வசதி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…

சென்னை,

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு வை-பை வசதி வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில் நேற்று, ஏ.சி.டி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பால மல்லாடி
மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இடையே இலவச வைபை வசதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
4 மாவட்டங்கள்

இது குறித்து அமைச்சர் கே.ஏ,செங்கோட்டையன் நிருபர்களிடத்தில் கூறியதாவது:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கோவை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 318 அரசு பள்ளிகளுக்கு,
வை-பை வசதி வழங்குதற்காக ஏ.சி.டி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தபடுத்தப்படவுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த இணையத்தளம் மூலம், உலக விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 4 மாவட்டங்களில், வை-பை
வசதிக்காக, பூமிக்கடியில் கேபிள் பதிக்க உள்ளனர்.

ரோபோ பயிற்சி

மேலும் வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். மார்ச் முதல் தொடங்கி ஏப்ரல் மாதத்தில், புத்தக வடிவில் அந்த பாடத்திட்டம் வழங்கப்படும். மாணவர்களுக்கான உதவி மையம் விரைவில் தொடங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, விஞ்ஞான
வளர்ச்சிக்காக ரோபோ பயிற்சி நடத்தப்பட்டது. மேலை நாடுகளுக்கு ஈடாக, கல்வி தரத்தை உயர்த்த, 96 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ரோபோ பயிற்சி கல்வியை வழங்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பயிற்சி, மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply