தற்போதைய செய்திகள்

ஏற்காட்டில் படகு போட்டி நடக்கிறது

ஏற்காட்டில் 15.05.2018 படகு போட்டி நடக்கிறது

 

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் பிரதான நிகழ்வாகவும், சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் படகு போட்டி நடைபெறுகிறது. ஏற்காடு படகு இல்ல ஏரியில் சுற்றுலா துறை சார்பில் படகு போட்டி இன்று (செவ்வாய் கிழமை) நடைபெறுகிறது. வருடந்தோறும் இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுவர்.

மேலும் நாளை கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்ல பிராணிகள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்களது செல்ல பிராணிகளை பலர் அழைத்து வருவர். மேலும் பல்வேறு வகை நாய்கள் காட்சியில் இருக்கும் என்பதால், இந்த கண்காட்சியை காணவும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
Leave a Reply