BREAKING NEWS

ஏர் ஏசியா விமானத்தின் அதிரடி ஆபர்!


 

ஏர் ஏசியா விமானம், பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அவ்வபோது பலவிதமான ஆபர்களை அறிவித்து வருகிறது .இந்நிலையில், தற்போது மழைக்காலத்தை ஒட்டி, பயணிகளை குதூகலிக்கும் வகையில் மழைக்கால ஆபர்களை அறிவித்துள்ளது .அதன்படி, தற்போது டிக்கெட்டின் ஆரம்ப விலையாக 1,299 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபரை பெற விரும்புவோர் வரும் 8-ந் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஜனவரி 31-ந் தேதி வரையில் அவர்கள் தங்களது பயண தேதியை முன்பதிவு செய்து 1,299 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் மற்றும் கொச்சி செல்ல 1,299 ரூபாய் ஆகும். இதே போல், ராஞ்சியிலிருந்து கொல்கத்தாவுக்கு செல்ல 1,599 ரூபாய் என்றும், புவனேஷ்வரிலிருந்து கொல்கத்தாவுக்கு செல்ல 1,499 ரூபாய் என்றும் ஆபர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply