BREAKING NEWS

ஏமனில் அல்கொய்தா பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர் ராணுவ வீரர்கள் 19 பேர் பலி

ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ முகாமை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பல வீரர்கள் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஏமனைச் சேர்ந்த அல்கொய்தா அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது உள்நாட்டுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதுதவிர, சமீபகாலமாக இங்கு மீண்டும் தலையெடுத்து வரும் அல் கொய்தா பயங்கரவாதிகள் அரசுப்படைகள் மீது அவ்வப்போது திடீரென அதிரடி தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அப்யான் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமை குறிவைத்து அல்கொய்தா பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 19 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக கடந்த வியாழக்கிழமையன்று ஏடனில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். முதலாவதாக அங்குள்ள காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 13 காவலர்கள் கொல்லப்பட்டனர். அடுத்தாக ராணுவ முகாமின் மீது பயங்கரவாதிகள் எவுகணை தாக்குதல் நிகழ்த்தினர். இதில் புதிதாக பணியில் சேர இருந்த இளம் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.




Leave a Reply